Pages

Ads 468x60px

Labels

Featured Posts

Sunday, 28 October 2012

தியேட்டரில் படம் பார்க்க இவ்வளவு செலவா?


உ.போ.ஒ படத்தை நான் புதுவையில் பிக் சினிமாஸ் (அட்லேப்ஸ்) ஜீவா தியேட்டரில் பார்த்தேன். இத்தியேட்டரை மீண்டும் திறந்த (கிட்டதட்ட ஒன்றரை வருடங்கள் ஆகிறது) பிறகு இதுதான் நான் பார்த்த முதல் திரைப்படம். தியேட்டர் renovation-க்கு பிறகு நன்றாக இருக்கிறது. சிறந்த ஒலி அமைப்பு, அரங்க அலங்காரம், சீட்டிங் அரேஞ்ச்மென்ட்ஸ் எல்லாமே சிறப்பாகவே உள்ளது. ஆனால் அதற்கு கொடுக்கும் விலை, யப்பா பயங்கரம்.

இப்பொழுதும் இங்கே புதுவையை பொறுத்தவரை ஏறக்குறைய அனைத்து தியேட்டர்களிலும் டிக்கெட்கள் விலை, முதல் வகுப்பை பொறுத்தவரை டிக்கெட் கட்டணம் ரூ.30, ரூ.35-க்கு மேல் இல்லை. டூ வீலர் பார்க்கிங் ரூ.5 மட்டுமே. ஸ்நேக்ஸ் ரேஞ்ச் ரூ.5-லிருந்து ரூ.10-15 வரை மட்டும்தான். கூல்டிரிங்க்ஸ் ரூ.15-18 வரைதான்.  இத்தியேட்டர்கள் அனைத்துமே ஏ.சி., டி.டீ.எஸ் சவுண்ட் சிஸ்டம் போன்ற அனைத்து வசதிகளும் கொண்டவை.

புதுவையை பொறுத்தவரை (எனக்கும் சேர்த்துதான்) இதுதான் அதிகபட்ச செலவு செய்ய கூடியதாக இருக்கும். மற்ற பெரிய நகரங்களை பொறுத்தமட்டில் எப்படியோ, எங்களுக்கு இதுவே சமயத்தில் அதிகம் (அதிலும் சிலசமயம் சில மொக்கை படங்களை பார்க்கும்போது). 

பிக் சினிமாஸ்-ஸை பொறுத்தவரை அனைத்தின் விலையும் பெயரை போலவே பிக்-தான். முதல் வகுப்பு கட்டணம் ரூ.60(மற்ற தியேட்டர்களை இருமடங்கு). 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் கட்டயாம் என்று போட்டிருக்கிறார்கள். எனது மகன் வயது நாலரை. டிக்கெட் எடுக்க சொல்லி கட்டாயப்படுத்துவார்களோ என்று நினைத்தேன. ஆனால் கட்டாயப்படுத்வில்லை. தியேட்டரில் அவ்வளவாக கூட்டமில்லை. அதனாலோ என்னவோ? டூ வீலர் பார்க்கிங் கட்டணம் ரூ.10 (இதுவும் டபுள்) (கொடுக்கும் டோக்கன் என்னவோ ஆட்டோ ஸ்டேன்ட் என்று இருக்கும், கார்களுக்கும் இதே டோக்கன்தான் கொடுக்கிறார்கள் என்றுதான் நினைக்கிறேன்). ஸ்நேக்ஸில் பப்ஸ் மட்டுமே குறைந்த விலை, ரூ.15, பாப்கார்ன், சம்சா என்று மற்ற அனைத்தும் ரூ.20(முதல்), கூல்டிரிங்க்ஸ் ரூ.40. இன்னமும் சில ஸ்பெஷல் ஆஃபர்கள் வேறு, 1 பாப்கார்ன், 2 கூல்டிரிங்க்ஸ் ரூ.90, ஒரு சம்சா, ஒரு கூல்டிரிங்கஸ் ரூ.65 என்று போகிறது. 

ஆச்சரியம் என்னவென்றால் இத்தனை விலை கொடுத்து வாங்கவும் ஒரு பெரிய வரிசை நிற்கிறது. நானும், என்னை போன்ற மிடில்க்ளாஸ் ஆசாமிகள் சிலரும் (சிலர் மட்டுமே) வெறுமே வேடிக்கை மட்டுமே பார்த்துகொண்டிருந்தோம். எங்களுக்கு தேவையான ஸ்நாக்ஸை நான் வெளியிலேயே வாங்கி கொண்டு சென்றிருந்தேன். என்னை போலவே பலரும் வாங்கி கொண்டு வந்ததை பார்த்தேன். (ஆனால் வெளிபடையாக தியேட்டருக்கு உள்ளே கொண்டு செல்ல முடியாது, மறைத்துதான் எடுத்து செல்ல வேண்டும், தியேட்டர் ஊழியர்கள் அவ்வாறு எடுத்து செல்லுமாறு கூறுகிறார்கள்).

எனக்கு சிறு வயதில் படம் பார்க்க சென்றது ஞாபகம் வருகிறது. நானும் என்னுடைய தம்பியும் ராஜா, கந்தன் அல்லது ராமன் தியேட்டருக்கு தான் போவோம் (அப்போழுது ராஜா தியேட்டர் எதிரேதான் வீடு). அப்பா ரூ.2 கொடுப்பார். டிக்கேட் ஒருவருக்கு 70 பைசா, இடைவேளையில் ஏதாவது சம்சா (அ) பிஸ்கேட் 25 பைசாவிற்கு இருவரும் சேர்ந்து வாங்கி தின்போம். மீதி 35 பைசாவை பத்திரமாக அப்பாவிடமே கொடுத்துவிடுவோம். சிறிது சிறிதாக டிக்கெட் கட்டணம் முதல் அனைத்தும் அதிகமாகி இப்பொழுது 

ரொம்பவே மலைக்க வைக்கிறது செலவு.

கமல்ஹாசனின் உள்ளுணர்வு, நகஸ்லைட் பிரச்சனை, கிரிக்கெட், ரிசெஷன்


இது சமீபத்தில் எனக்கு வந்த குறுந்தகவல்.

கமலஹாசனின் உள்ளுணர்வு
1978 - சிவப்பு ரோஜாக்கள் - 1979 - சைக்கோ ராமன் பிடிபட்டான்.
1988 - சத்யா, 1989 - இந்தியவில் வேலையில்லா திண்டாட்டம்.
1992 - தேவர் மகன், 1993 தென்னிந்தியாவில் ஜாதி கலவரம்.
1994 - மஹாநதி, 1996 - பல மோசடி நிதிநிறுவனங்கள் மக்களை ஏமாற்றின
2000 - ஹே ராம், 2002 - குஜராத்தில் இந்து-முஸ்லீம் கலவரம்
2003 - அன்பே சிவம் படத்தில் சுனாமி என்ற வார்த்தையை பயன்படுத்தினார், 2004 - சுனாமி வந்தது
2006 - வேட்டையாடு விளையாடு, உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் சீரியல் கொலைகள்
2008 - தசாவதாரம் - பயங்கரமான வைரஸ் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வந்தது, 2009 - பன்றி காய்ச்சல் பரவியுள்ளது.
எப்படி இப்படியெல்லாம் யோசிக்கறாங்க?

மாவோயிஸ்ட் நக்ஸ்லைட்கள் அட்டகாசம் மிகவும் அதிகமாகி கொண்டே வருகிறது. கடந்த மாதம் ஜார்கண்ட்டில் ஒரு போலிஸ்காரர் தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர். மேற்கு வங்கத்தில் மற்றொரு கடத்தல் சம்பவம் நடந்துள்ளது. கடத்தப்பட்டவர் அதிர்ஷகாரர், உயிருடன் மீண்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் ரயில் கடத்தல் டிராமா நடந்துள்ளது. நேற்று மீண்டும் ஒரு போலிஸ் அதிகாரியை கடத்திகொண்டு சென்றுள்ளனர். மாவோயிஸ்டுகளின் தீவிரவாத செயல்கள் மத்தியில் காங்கிரஸின் புதிய அரசு பதவியேற்றபின் மிகவும் அதிகமாகியுள்ளது.  இந்த நிலையில் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய ரயில்வே அமைச்சருக்கு இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக குற்றம் சாட்டியுள்ளது. இதில் எந்த அளவு உண்மையிருக்கிறது என்று தெரியவில்லை. இன்னும் என்ன என்ன நடக்கப்போகிறதோ தெரியவில்லை. இந்நிலையில் இத்தகைய ரயில் சிறைபிடிப்பு சம்பவங்கள் இன்னும் அதிகரிக்கும் என்றும் உளவுத்துறை உஷார்படுத்தியிருக்கிறது.

நாக்பூரில் நேற்று நடந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில் நீண்ட நாட்கள் கழித்து தோனியின் அதிரடி ஆட்டத்தை காணமுடிந்தது. ஒரு பொறுப்புள்ள கேப்டனாக விளையாடினார். ஆரம்பத்திலேயே அதிரடி காட்டாமல் கொஞ்சம்  கொஞ்சமாக ஆட்டத்தின் வேகத்தை அதிகரித்து வாணவேடிக்கை காட்டினார் மனிதர். தொடந்து 3 சிக்ஸர் அடித்து செஞ்சுரி அடித்து ஆஸ்திரேலியாவிற்கு ஆப்பு அடித்தார். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்து கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.மேன் ஆஃப் தி மேட்ச் இவரே. பரிசு பைக். இது இவர் பெறும் 23ஆவது பைக்காம். விரைவில் 30ஆவது பைக்கை பெறுவேன் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். உங்கள் நம்பிக்கை விரைவில் பலிக்கட்டும் தோனி. வாழ்த்துக்கள்.

மீண்டும் லே ஆஃப் பற்றிய பேச்சுக்கள் எழ ஆரம்பித்திருகின்றது. பின்னோக்கி அவர்கள் தன்பதிவில் அவர் வேலை செய்யும் அமெரிக்க அலுவலகத்தில் நடந்த லே ஆஃப் பற்றி கூறியிருக்கிறார். இந்தியாவில் வேலை செய்வதால் தன் தலை தப்பியதாக கூறியிருக்கிறார். பின்னோக்கி அவர்களுக்கு என்ன ஆறுதல் கூறுவதென்று தெரியவில்லை. சென்ற வாரம் சத்யம் நிறுவனத்திலும் 6000 பேருக்கு பிங்க் நோட்டீஸ் கொடுத்தள்ளதாக செய்தி வந்தது. ரிசெஷன் முடிவுக்கு வந்துவிட்டதாக செய்திகள் வருகிறது. அப்படியும் இன்னமும் ஏன் லே ஆஃப்கள் தொடர்கின்றன என்று புரியவில்லை. யாராவது தெரிஞ்சா சொல்லுங்கப்பா ரிசெஷன் முடிவுக்கு வந்துவிட்டதா இல்லை தொடர்கிறதா?