Pages

Labels

Sunday 28 October 2012

கமல்ஹாசனின் உள்ளுணர்வு, நகஸ்லைட் பிரச்சனை, கிரிக்கெட், ரிசெஷன்


இது சமீபத்தில் எனக்கு வந்த குறுந்தகவல்.

கமலஹாசனின் உள்ளுணர்வு
1978 - சிவப்பு ரோஜாக்கள் - 1979 - சைக்கோ ராமன் பிடிபட்டான்.
1988 - சத்யா, 1989 - இந்தியவில் வேலையில்லா திண்டாட்டம்.
1992 - தேவர் மகன், 1993 தென்னிந்தியாவில் ஜாதி கலவரம்.
1994 - மஹாநதி, 1996 - பல மோசடி நிதிநிறுவனங்கள் மக்களை ஏமாற்றின
2000 - ஹே ராம், 2002 - குஜராத்தில் இந்து-முஸ்லீம் கலவரம்
2003 - அன்பே சிவம் படத்தில் சுனாமி என்ற வார்த்தையை பயன்படுத்தினார், 2004 - சுனாமி வந்தது
2006 - வேட்டையாடு விளையாடு, உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் சீரியல் கொலைகள்
2008 - தசாவதாரம் - பயங்கரமான வைரஸ் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வந்தது, 2009 - பன்றி காய்ச்சல் பரவியுள்ளது.
எப்படி இப்படியெல்லாம் யோசிக்கறாங்க?

மாவோயிஸ்ட் நக்ஸ்லைட்கள் அட்டகாசம் மிகவும் அதிகமாகி கொண்டே வருகிறது. கடந்த மாதம் ஜார்கண்ட்டில் ஒரு போலிஸ்காரர் தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர். மேற்கு வங்கத்தில் மற்றொரு கடத்தல் சம்பவம் நடந்துள்ளது. கடத்தப்பட்டவர் அதிர்ஷகாரர், உயிருடன் மீண்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் ரயில் கடத்தல் டிராமா நடந்துள்ளது. நேற்று மீண்டும் ஒரு போலிஸ் அதிகாரியை கடத்திகொண்டு சென்றுள்ளனர். மாவோயிஸ்டுகளின் தீவிரவாத செயல்கள் மத்தியில் காங்கிரஸின் புதிய அரசு பதவியேற்றபின் மிகவும் அதிகமாகியுள்ளது.  இந்த நிலையில் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய ரயில்வே அமைச்சருக்கு இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக குற்றம் சாட்டியுள்ளது. இதில் எந்த அளவு உண்மையிருக்கிறது என்று தெரியவில்லை. இன்னும் என்ன என்ன நடக்கப்போகிறதோ தெரியவில்லை. இந்நிலையில் இத்தகைய ரயில் சிறைபிடிப்பு சம்பவங்கள் இன்னும் அதிகரிக்கும் என்றும் உளவுத்துறை உஷார்படுத்தியிருக்கிறது.

நாக்பூரில் நேற்று நடந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில் நீண்ட நாட்கள் கழித்து தோனியின் அதிரடி ஆட்டத்தை காணமுடிந்தது. ஒரு பொறுப்புள்ள கேப்டனாக விளையாடினார். ஆரம்பத்திலேயே அதிரடி காட்டாமல் கொஞ்சம்  கொஞ்சமாக ஆட்டத்தின் வேகத்தை அதிகரித்து வாணவேடிக்கை காட்டினார் மனிதர். தொடந்து 3 சிக்ஸர் அடித்து செஞ்சுரி அடித்து ஆஸ்திரேலியாவிற்கு ஆப்பு அடித்தார். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்து கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.



மேன் ஆஃப் தி மேட்ச் இவரே. பரிசு பைக். இது இவர் பெறும் 23ஆவது பைக்காம். விரைவில் 30ஆவது பைக்கை பெறுவேன் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். உங்கள் நம்பிக்கை விரைவில் பலிக்கட்டும் தோனி. வாழ்த்துக்கள்.

மீண்டும் லே ஆஃப் பற்றிய பேச்சுக்கள் எழ ஆரம்பித்திருகின்றது. பின்னோக்கி அவர்கள் தன்பதிவில் அவர் வேலை செய்யும் அமெரிக்க அலுவலகத்தில் நடந்த லே ஆஃப் பற்றி கூறியிருக்கிறார். இந்தியாவில் வேலை செய்வதால் தன் தலை தப்பியதாக கூறியிருக்கிறார். பின்னோக்கி அவர்களுக்கு என்ன ஆறுதல் கூறுவதென்று தெரியவில்லை. சென்ற வாரம் சத்யம் நிறுவனத்திலும் 6000 பேருக்கு பிங்க் நோட்டீஸ் கொடுத்தள்ளதாக செய்தி வந்தது. ரிசெஷன் முடிவுக்கு வந்துவிட்டதாக செய்திகள் வருகிறது. அப்படியும் இன்னமும் ஏன் லே ஆஃப்கள் தொடர்கின்றன என்று புரியவில்லை. யாராவது தெரிஞ்சா சொல்லுங்கப்பா ரிசெஷன் முடிவுக்கு வந்துவிட்டதா இல்லை தொடர்கிறதா?

0 comments:

Post a Comment