Pages

Labels

Sunday 28 October 2012

தியேட்டரில் படம் பார்க்க இவ்வளவு செலவா?


உ.போ.ஒ படத்தை நான் புதுவையில் பிக் சினிமாஸ் (அட்லேப்ஸ்) ஜீவா தியேட்டரில் பார்த்தேன். இத்தியேட்டரை மீண்டும் திறந்த (கிட்டதட்ட ஒன்றரை வருடங்கள் ஆகிறது) பிறகு இதுதான் நான் பார்த்த முதல் திரைப்படம். தியேட்டர் renovation-க்கு பிறகு நன்றாக இருக்கிறது. சிறந்த ஒலி அமைப்பு, அரங்க அலங்காரம், சீட்டிங் அரேஞ்ச்மென்ட்ஸ் எல்லாமே சிறப்பாகவே உள்ளது. ஆனால் அதற்கு கொடுக்கும் விலை, யப்பா பயங்கரம்.

இப்பொழுதும் இங்கே புதுவையை பொறுத்தவரை ஏறக்குறைய அனைத்து தியேட்டர்களிலும் டிக்கெட்கள் விலை, முதல் வகுப்பை பொறுத்தவரை டிக்கெட் கட்டணம் ரூ.30, ரூ.35-க்கு மேல் இல்லை. டூ வீலர் பார்க்கிங் ரூ.5 மட்டுமே. ஸ்நேக்ஸ் ரேஞ்ச் ரூ.5-லிருந்து ரூ.10-15 வரை மட்டும்தான். கூல்டிரிங்க்ஸ் ரூ.15-18 வரைதான்.  இத்தியேட்டர்கள் அனைத்துமே ஏ.சி., டி.டீ.எஸ் சவுண்ட் சிஸ்டம் போன்ற அனைத்து வசதிகளும் கொண்டவை.

புதுவையை பொறுத்தவரை (எனக்கும் சேர்த்துதான்) இதுதான் அதிகபட்ச செலவு செய்ய கூடியதாக இருக்கும். மற்ற பெரிய நகரங்களை பொறுத்தமட்டில் எப்படியோ, எங்களுக்கு இதுவே சமயத்தில் அதிகம் (அதிலும் சிலசமயம் சில மொக்கை படங்களை பார்க்கும்போது). 

பிக் சினிமாஸ்-ஸை பொறுத்தவரை அனைத்தின் விலையும் பெயரை போலவே பிக்-தான். முதல் வகுப்பு கட்டணம் ரூ.60(மற்ற தியேட்டர்களை இருமடங்கு). 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் கட்டயாம் என்று போட்டிருக்கிறார்கள். எனது மகன் வயது நாலரை. டிக்கெட் எடுக்க சொல்லி கட்டாயப்படுத்துவார்களோ என்று நினைத்தேன. ஆனால் கட்டாயப்படுத்வில்லை. தியேட்டரில் அவ்வளவாக கூட்டமில்லை. அதனாலோ என்னவோ? டூ வீலர் பார்க்கிங் கட்டணம் ரூ.10 (இதுவும் டபுள்) (கொடுக்கும் டோக்கன் என்னவோ ஆட்டோ ஸ்டேன்ட் என்று இருக்கும், கார்களுக்கும் இதே டோக்கன்தான் கொடுக்கிறார்கள் என்றுதான் நினைக்கிறேன்). ஸ்நேக்ஸில் பப்ஸ் மட்டுமே குறைந்த விலை, ரூ.15, பாப்கார்ன், சம்சா என்று மற்ற அனைத்தும் ரூ.20(முதல்), கூல்டிரிங்க்ஸ் ரூ.40. இன்னமும் சில ஸ்பெஷல் ஆஃபர்கள் வேறு, 1 பாப்கார்ன், 2 கூல்டிரிங்க்ஸ் ரூ.90, ஒரு சம்சா, ஒரு கூல்டிரிங்கஸ் ரூ.65 என்று போகிறது. 

ஆச்சரியம் என்னவென்றால் இத்தனை விலை கொடுத்து வாங்கவும் ஒரு பெரிய வரிசை நிற்கிறது. நானும், என்னை போன்ற மிடில்க்ளாஸ் ஆசாமிகள் சிலரும் (சிலர் மட்டுமே) வெறுமே வேடிக்கை மட்டுமே பார்த்துகொண்டிருந்தோம். எங்களுக்கு தேவையான ஸ்நாக்ஸை நான் வெளியிலேயே வாங்கி கொண்டு சென்றிருந்தேன். என்னை போலவே பலரும் வாங்கி கொண்டு வந்ததை பார்த்தேன். (ஆனால் வெளிபடையாக தியேட்டருக்கு உள்ளே கொண்டு செல்ல முடியாது, மறைத்துதான் எடுத்து செல்ல வேண்டும், தியேட்டர் ஊழியர்கள் அவ்வாறு எடுத்து செல்லுமாறு கூறுகிறார்கள்).

எனக்கு சிறு வயதில் படம் பார்க்க சென்றது ஞாபகம் வருகிறது. நானும் என்னுடைய தம்பியும் ராஜா, கந்தன் அல்லது ராமன் தியேட்டருக்கு தான் போவோம் (அப்போழுது ராஜா தியேட்டர் எதிரேதான் வீடு). அப்பா ரூ.2 கொடுப்பார். டிக்கேட் ஒருவருக்கு 70 பைசா, இடைவேளையில் ஏதாவது சம்சா (அ) பிஸ்கேட் 25 பைசாவிற்கு இருவரும் சேர்ந்து வாங்கி தின்போம். மீதி 35 பைசாவை பத்திரமாக அப்பாவிடமே கொடுத்துவிடுவோம். சிறிது சிறிதாக டிக்கெட் கட்டணம் முதல் அனைத்தும் அதிகமாகி இப்பொழுது 

ரொம்பவே மலைக்க வைக்கிறது செலவு.

0 comments:

Post a Comment